1தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் செருபாலக்காடு கிராமத்தில் அருள்மிகு அடைக்கலம்காத்த அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு பிற்பட்ட கோயிலாகும்.கிராம மக்களுக்கு குல தெய்வமாக வழிபாட்டு தலமாக உள்ளது. இத்திருக்கோயில் கருவறை, அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் என்ற அமைப்பில் செங்கல், சிமெண்ட் கான்கிரீட் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மகா மண்டபத்தில் தனித்தனி சன்னதியாக சுதை சிற்பங்களாக பல்வேறு தெய்வங்கள் நின்ற நிலையில் காணப்படுகிறது..திருச்சுற்றின் வெளிப்பகுதியில் யானை, குதிரை போன்ற வாகனங்கள் காணப்படுகின்றது. இக்கோயில் அமைப்பை கொண்டு இதும 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயில் என்று அறியமுடிகிறது.. கர்ப்பகிரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் தம் துணைவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். கிழக்கு பகுதியில் சப்தமாதர் காணப்படுகின்றது.ஏழு கன்னியர். மகாமண்டபம் சிமெண்ட் மற்றும் செங்களால்...