ஆண்டவன் அருளாளர்களையும் போற்றும் இத்திருக்கோயிலுடன் குருவராஜப்பேட்டை மாணிக்கவாசகர் மடாலயம் இணைந்துள்ளது. திருத்தணியிலிருந்து 13 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள இம்மடாலயம், எட்டாம் திருமுறை ஆகிய திருவாசகம் அருளியவரும், சைவ சமய குரவர்களுள் ஒருவருமான மாணிக்கவாசகரின் ஆன்மீகப் பணியை உலகறியச் செய்து வரும் சிறப்புடையது. இங்கு நல்ல நூல் நிலையம் அரிய நூல்களைக் கொண்டு இயங்கி வருகிறது.