தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், தியாகசமுத்திரம் கிராமத்தில் , சுவாமி மலை திருக்கோயிலில் இருந்து 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் பெயர்: பூலோகநாத சுவாமி (சிவபெருமான்) இத்திருக்கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷம் போன்ற திருவிழாகள் அந்த நன்னாளில் உபயதாரர்கள் பங்களிப்புடன் நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடைப்பெற்று வருகிறது. இத்திருக்கோயிலின் மூலவர் பூலோகத்தில் நடைப்பெறும் தீய விஷயங்களில் இருந்து விடுவிக்க மற்றும் தண்டிக்க அவதாரம் எடுத்தாக கூறப்படுகிறது.. இது இத்திருத்தலத்தின் தனி சிறப்பாகும்