அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலின் அருகில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பரம்பரை தர்மகர்த்தா மற்றும் துணைஆணையர் / செயல்அலுவலர் ஆகியோர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது .அருள்மிகு வெள்ளீஸ்வரருக்கு பார்கவேஸ்வரர் என்ற வேறு திருநாமமும் உண்டு. இத்திருத்தலத்தில் கண்பார்வை இழந்து சிவனை வேண்டியாகம் செய்த சுக்கிராச்சாரியாருக்கு சிவபெருமான் பார்வை தந்து காட்சி அளித்தார். இத்தலம் சுக்கிர ஸ்தலமாக உள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம் சுக்கிராச்சாரியார் இங்கு வழிபட்டதால் இப்பெயர் பெற்றது. ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மாங்காடு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஸ்ரீ வைகுண்டப்பெருமாள் திருக்கோயிலிலும் தரிசனம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது, ஏனெனில் இந்த மூன்று கோயில்களும் ஸ்ரீ...