இத்தலத்தில் கஜேந்திரன் என்ற யாணையின் பத்திக்கு இறங்கி பெருமாள் காட்சி அளித்து அருள்செய்ததால் கஜேந்திர வரதராஜ பெருமாள் (ஆனை காத்த பெருமாள்) என சிறப்பிக்கப்படுகிறது. இத்திருக்கோயிலானது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டம் நாராயணபுரம் களப்பால் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் திருத்துறைப்பூண்டி இரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து மேற்கே சுமார் 12கி.மீ தொலைவிலும், மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் திருப்பத்தூர் பேருந்து நிறுத்ததிலிருந்து தெற்கே சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.