காஞ்சிபுரத்தில் திருமுறை பாடல் பெற்ற தலங்களில் ஐந்து. அதில் திருக்கச்சிநெறிக் காரைக்காடு என வழங்கக்கூடிய சத்தியநாதசுவாமி திருத்தலமாகும். திருஞானசம்பந்த பெருமான் காஞ்சிபுரம் வந்தபோது அங்கே பதிகம் பாடினார். தலபுராணத்திலே செவி வழி செய்தியாக நெறிஞ்சிமுட்கள் நிறைந்து காணப்பட்டதாகவும் அந்த பகுதியில் சத்தியநாதசுவாமியை தேவேந்திரன் காஞ்சிபுரம் வந்து பாவங்கள் நீங்கி இந்திர தீர்த்தம் எனும் குளத்தினை உருவாக்கினார். மேற்கு பார்த்த மூலவர் சன்னதியில் சத்தியநாதசுவாமியும் பிரம்மராம்பிகை அம்பிகையும் அமைந்துள்ளார். புத பகவான் பூசை செய்து அவர் கிரகநிலையினை அடைந்ததாக காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழிபட்ட ஸ்தலம். வார வழிபாட்டிலே புதன்கிழமைக்கு உரிய தலமாக விளங்குகிறது. இங்கு புதபகவானுக்கு தனிசன்னதி உண்டு. பக்தர்கள் இன்றும் அங்கே சென்று தரிசித்து...