அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலுக்கு வடபுறமும் அருள்மிகு மாதவ பெருமாள் திருக்கோயிலுக்கு மேற்கு புறமும் அம்மன் அமைந்துள்ள தெருவிற்கு அம்மன் பெயராலே முண்டகக்கண்ணியம்மன் கோயில் தெரு எனத் தொன்று தொட்டு அழைக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில் சுமார் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக அம்பாள் தோன்றியதுடன் சுயம்புருவான அருவுருவ தோற்றத்தின் மேல் பகுதி தாமரை மொட்டு வடிவிலும் சுயம்புவின் முகப்பு தோற்றத்தில் அமைந்துள்ளது. நடுப்பகுதியில் திரிசூலம் பதிக்கப்பட்டு உள்ளது. தாமரையின் இன்னொரு பெயர் முண்டகம் என்பதால் மக்கள் இந்த அம்மனை முண்டகக்கண்ணியம்மன் என்று அழைக்கின்றனர். அம்மனின் பின்புறம் பெரிய புற்றிலிருக்கும் நாகம் நாளும் அம்பாளை வழிபட்டு வந்ததால் அம்பாளுக்கு ஓலைக் கூரை அமைக்கப்பட்டதாக வழிவழிச்செய்தி உள்ளது....