1.அருள்மிகு சம்போ மகாதேவ சுவாமி திருக்கோயில் மாடக்கோயில் வகையை சார்ந்ததாகும் . 2.இத்திருக்கோயில் கிபி. 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் பிற்காலச் சோழகர்களால் கட்டப்பட்ட மாடக்கோயிலாகும் சிறப்பம்சம் 3.கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை கற்களால் கட்டப்பட்டுள்ளது. 4. இத்திருக்கோயில் சோழர்கால கலை பணியில் கட்டப்பட்டுள்ளது. 5.மாட மண்டபங்கள் மற்றும் ஏகதள விமானம் ஆகியவை சோழர் கால கட்டுமானத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. 6.மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் அருள்மிகு சௌபாக்கியவதி அம்மன் சன்னதி தனியாக கட்டப்பட்டுள்ளது. 7.ஏறக்குறைய 1.1/2 ஏக்கர் பரப்பளவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. 8.இத்திருக்கோயிலின் கற்சிற்பங்கள் அனைத்தும் சோழர்கால கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. 9.கி.பி.12-ம் நூற்றாண்டிற்கு பிறகு விநாயகர் சன்னதி , முருகன் சன்னதி ஆகியவை கட்டப்பட்டுள்ளன.