காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், கோவூரில் உள்ள அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோயில் உள்ளது. மேற்படி போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் 5வது கி. மீ. தூரத்தில் இத்தலம் இமைந்துள்ளது. மூர்த்தி சிறப்பு: பசுவடிவமான பார்வதி தேவிக்கு சிவபெருமான் தன் சிவலிங்க திருமேனியை காட்டிய இடமாதலால் திருமேனீஸ்வரம் என்று சிறப்பு பெற்றது இத்தலம். தெய்வதியாகராசர் இத்தல இறைவன் மீது கோவூர் பஞ்சரத்னம் பாடி சிறப்பித்துள்ளார். பெரிய புராணம் எழுதுவதற்கு முன் உலகெலாம் என்ற அடியை சேக்கிழாருக்கு இறைவன் கோவூரில் அருளியதாக புராணம் கூறுகிறது. கோயில் தெற்கு...