குடந்தை கீழ் கோட்டம் என்றழைக்கப்படும் பெருமையுடையது அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலாகும். நாகர்களின் அரசன் நாகராஜனால் வழிபட்ட பெருமான் பிரளய கால ருத்திரேசுவரராக விளங்கும் தலமாகவும் இத்திருக்கோயில் விளங்குகின்றது. எழில்மிகு சிற்பங்களைக் கொண்டுள்ள இத்திருகோயில் முற்காலச் சோழர்கள், பல்லவர்களின் கலைவளர்ச்சிக்கு சான்றாகவும் விளங்குகின்றது. மகா பிரளயத்தில் உயிர்களின் ஜீன் அணுக்கள் பிரம்மா கும்பத்தில் வைத்துவிட அக்கும்பத்தை வேடனாக வந்த சிவபெருமான் அம்பெய்து உடைக்க கும்பமுடைந்த இடமே கும்பகோணமாகும்.