108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றாகும். ஸ்ரீபத்ரி நாராயணர் நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாகவும் பிரம்மாவை சாரதியாகவும் இந்திரவிமானத்தில் இந்திரபுஷ்கரனி கரையில் வீற்றிருந்து அருள்பாளிக்கிறார். பிர்மா , இந்திரன், ஐராவதம் , மதங்கமகரிஷி ஆகியோர் பூஜுத்த தலமாகும் . சோழ நாட்டு திவ்விய தேசங்கள் 40. அதில் திருநாங்கூர் திவ்விய தேசங்கள் 11. இத்திருக்கோயிலில் 11கருடசேவை நடைபெறும் பிரதான திருக்கோயிலாகும் . ஸ்ரீதிருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் (பாடல் பெற்ற) செய்யப்பட்ட தலமாகும். திருநகரி ஸ்ரீதிருமங்கை ஆழ்வார் ஒவ்வொரு ஆண்டும் தைஅமாசையன்று இத்திவ்யதேசத்திற்கு எழுந்தருளி மங்களாசாசனம் , 11- கருடசேவை கண்டருளும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.