சோழவள நாட்டில் கும்பகோணம் மாநகருக்கு தென் மேற்கு திசையில் உள்ள தாராசுரம் எனும் ஊரில் வசிக்கும் பக்தகோடிகள் கும்பகோணம் மாநகருக்கு பெருமை சேர்க்கும் இரு நதிகளில் ஒன்றான அரசலாற்றின் கரையில் கிராம தேவதைகளுக்கு பூஜை செய்து வந்தனர். அப்பொழுது அரசலாற்றின் நதி பாலத்திற்கு அருகாமையில் உள்ள அரச மரத்தின் அடிவாரத்தில் ஒரு புற்று இருந்தது. இந்த புற்றினை கண்ட பக்தகோடிகள் பால் வார்த்து வேல் நட்டு பூஜை செய்து வந்தனர் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிகிழமை வேல் திருவீதியுலா புறப்பாடு மிகப் பிரம்மாண்டமாக செய்து வந்தனர். ஒரு நாள் புற்றுக்கும் வேலுக்கும் பூஜை செய்து கொண்டிருக்கும்போது அப்புற்றின் அருகே ஒரு சாமியார் தோன்றி இப்புற்றில் முனியாண்டவர் குடிகொண்டு...