பல நூறு வருடங்களுக்கு முன்னால் திருவரங்கத்தில் பெரிய பெருமாளுக்கு தொண்டு புரிந்து வந்த மாதவாசார் என்கிற பெரியவருக்பகு குழந்தை இல்லை என்கிற பெரிய குறையுடன் பல தலங்களுக்குச் சென்று திருவரங்கனின் ஆணைப்படி மாடமாமயிலை திருவல்லிக்கேணியை வந்தடைந்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளை சேவித்து பின் திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாளை சேவித்து புத்ர பாக்யம் பெற பிராத்தனை செய்தார். அவ்வாறு நடைபயணமாக திருவல்லிக்கேணிக்கு போகும் வழியில் இரவு ஆகிவிட்டதால் இந்த மாபிலம் என்கிற பெரிய காட்டினிலே தங்கி, கண் அயர்ந்தார் அப்பொழுது குழந்தாய் என குரல் கேட்டு விழித்து பார்க்க, சயனித்திருக்கும் பெருமாளாகிய ஸ்ரீரங்கநாதர் காட்சியளித்து இவ்விடத்தில் மண்ணுக்கடியில் இருக்கும் என்னை எடுத்து பூஜித்து, சந்நிதி கட்டும், உமக்கு புத்ர பாக்யம் உண்டாகும் எனக்கூறி மறைய, விடிந்தபின்...