படைப்பின் நாயகன் பிரம்மா தனக்கு பூலோகத்தில் கோயில் ஏதும் இல்லை என்ற காரணத்தால் வருத்தப்பட்டு சிவனை நோக்கி பிரம்மாண்ட யாகம் ஒன்றை நடத்தினார். ஆனால் அந்த யாகத்திற்கு தன் மனைவி சரஸ்வதி தேவியை அழைக்கவில்லை, எனவே கோபம் கொண்ட சரஸ்வதி பிரம்மா நடத்தும் யாகம் வெளிச்சம் இல்லாமல் இருண்டு போய் தடைபடும் என சாபமிட்டாள். பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணுவிடம் தனது யாகம் தடைபடாமல் இருக்க வேண்டினார். விஷ்ணுவும் பிரம்மனின் கோரிக்கையை ஏற்று ஜோதி(ஒளி) வடிவில் காட்சி தந்து பிரம்மனின் யாகம் சிறப்பாக நடக்க அருள்புரிந்தார். இதனால் தான் இங்குள்ள பெருமாள் விளக்கொளி பெருமாள் என்றும் தீபப் பிரகாசர் என்றும் அழைக்கப்படுகிறார். சரஸ்வதி தேவியையும் சமாதானம் செய்தார். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ...