இக்கோயிலில் காணப்படு்ம் பல்லவ மன்னா் கம்பவா்மன் காலக்கல்வெட்டில் களத்தாா் கோட்டத்து ஆனியா் வம்பங்காட்டு மகாதேவா் வழக்குகள் தீர்க்கும் வம்பக்காட்டு மகாதேவா் என பெயா் உண்டு. கோயில் விளக்கு எரிக்க 40 கழஞ்சு பொன், காளியூா் கோட்டத்தைச்சோ்ந்த ஆளுங்கனத்தாருள் ஒருவனான ஸ்ரீதர் கிராமவித்தன் என்பான் ஆனியூர் மகாசபையிடம் அளித்தான். அதிலிருந்து வரும் வட்டிைக் கொண்டு நந்தா விளக்கு எரிக்க சபை ஓத்துக் கொண்டதாக கல்வெட்டுக் கூறுகிறது. இக்கோயில் கல்வெட்டுகளில் சோழா் காலத்தில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறறதை நன்றாக அறிய முடிகிறது.இந்த தல ஈசனை வழிப்பாட்டால் கோா்ட் வழக்கு கடன் பிரச்சனை மற்றும் வில்லங்கம் யாவும் விலகும் என தெய்வ பிரசன்னம் சொல்கிறது.