ஸ்ரீ வைகுந்தத்தைப் போல ஏழு உள் நுழையும் கோபுர வாயில்களைஉடையதாக 21/2 ஏக்கர் இடத்தில்இருந்த தலம். மிகப்பெரிய தேர்மண்டபம் இருந்த தலம் . ராஜராஜசோழன் தந்தை சுந்தரச்சோழன் காலத்திற்கு முந்தைய ஆலயம். ராமாயண மகாபாரத நிகழ்வுகளை கொண்ட கோவில். இன்று ஒரே ஒரு உள்நுழைவு கோபுரம் உள்ளது. அதில் இரண்டு அடுக்குகள் மட்டுமே மிஞ்சியுள்ளது. கோடிதீர்த்தம் என்கிற தீர்த்த கிணறு ராமரின் வில்லினால் இத் தலத்தில் உருவாக்கப்பட்டது. அர்ச்சுணன் ஸ்ரீ கிருஷ்ணர் மேல் கொண்ட அதீத பக்தியால் ஸ்ரீ மகாவிஷ்ணு இங்கே ஸ்ரீ கிருஷ்ணராக காட்சி கொடுத்தார் . அனுமனுக்கு ஸ்ரீ மகாவிஷ்ணுவை ராமராக பார்க்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. இங்கு தவம் செய்ய ஸ்ரீ மகாவிஷ்ணு அனுமனுக்கு. ஸ்ரீ ராமனாக காட்சி கொடுத்தார். புராண காலத்தில்,...