சென்னை நகரின் நடுவில் அமைந்துள்ள சைதாப்பேட்டை என்ற ஊர் பழமையானதும், பல்லவர் ஆட்சிக் காலத்தில் துவங்கி, கிழக்கிந்திய கம்பெனியர் ஆட்சியிம், இன்றைய நாளிலும் சீரும் சிறப்பும் மிக்கதாம். தொடக்க காலத்தில் இவ் ஆலயத்தின் பின்புறம் வன்னி மரமும், மேற்புறமாக அரச மரங்களும், வில்வ மரங்கள் அமைந்திருக்கின்றன. ஆலயத்தில் அரச மரத்தின் கீழ் இன்றைய நாளில் மிக பிரசித்திப் பெற்று விளங்கி, அருள்பாலித்து வரும் விநாயகப் பெருமான் மேற்கு நோக்கியும், வில்வ மரத்தினடியில் சிவலிங்கம் கிழக்கு நோக்கியும் இருந்து திருவருள் புரிய அன்பர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.