முன்னொரு காலத்தில் இந்தக்கோயில் அமைந்திருக்கும் இடம் முள்காடாக இருந்தது எனவும், அச்சூழலில், ஒரு இரயில்வே அதிகாரி பேருந்து நிலையம் செல்வதற்காக இவ்வழியே சென்றபொழுது, ஒரு கருங்கல்லை கண்டதோடு, அக்கல்லில் வீரஆஞ்சநேயர் உருவம் இருப்பதை கண்டு, அதனை சுத்தம் செய்து, அதனை அங்கேயே நிறுவி, வழிபட்டதாகவும் தெரிகிறது. நாளடைவில், ஆஞ்சநேயருக்கு, எளிய முறையில் கோயில் கட்டி பக்தர்கள் வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், 1990-ல் கோவிலின் பழைய கட்டுமானம் சிதிலமடைந்ததால் அவை அகற்றப்பட்டு, பெரிய அளவில் திருக்கோயில் நிர்மானிக்கப்பட்டு, 30.08.1992-ல் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக சென்ற நிலையில், மீண்டும் கோயில் விஸ்தரிக்கப்பட்டும், புதியதாக வண்ணங்கள் தீட்டப்பட்டும், 25.08.2013-ல் மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற்றுள்ளது. இச்செய்திகள், கோவிலின்...