கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் என்றழைக்கப்படும் திருமுதுகுன்றம் நகரில் இருந்து மேற்கு திசையில் சுமார் 8 கி.மீ தொலைவில் பரவளூர் கிராமத்தின் மையப்பகுதியில் மணிமுத்தாற்றின் தென் கரையோரம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு சுந்தரேஸ்வரர் பக்தர்களின் கண்கண்ட தெய்வமாக அருள் பாலிக்கின்றார். இவ்வீசனின் இடப்புறம் அருள்மிகு மீனாட்சி அம்மன் எழுந்தருளி அள்பாலித்து வருகின்றார்.