கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டத்தில், புண்ணியநதியாக கருதப்படும் மணிமுத் நதி விருத்தாசலம் நகரினை நோக்கி கிழக்கு முகமாக வந்து இத்திருக்கோயில் அமைந்துள்ள இடத்தில் தெற்குமுகமாக திரும்பி பாய்கிறது. இதன் காரணமாக இந்த இடம் புண்ணியமாக கருதி பொதுமக்கள் இந்த நதியில் நீராடி அவ்விடத்தில் அமைந்துள்ள இந்த விநாயகரை தரிசித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆலயம் பொதுமக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாக விளங்கி வருகிறது. இத்திருக்கோயில் பாடல் பெற்ற திருத்தலம் அல்ல. நூறு ஆண்டுகளுக்கு உட்பட்ட பிராத்தனை திருக்கோயிலாக விளங்கி வருகிறது.