சிவாபெருமானின் அனந்த மாநடனத்தை காண விழைந்த ஆதிசேடன் திருமாலின் அனுமதி பெற்று சின்னஞ்சிறிய நாக உருவுடன் ஒரு பிலத்துவாரத்தின் வழியே சிதம்பரத்திற்கு வந்து சேர்ந்தார். அந்த இடம் இன்று நாகச்சேரி குளம் என வழங்கப்பெறுகிறது . நாகச்சேரியில் நீராடி கொண்டிருந்த அத்திரி முனிவரின் மனைவி அனுசூயையின் பாதத்தில் அந்த நாகம் சுற்றிக்கொள்ள அம்முனிபத்தினி பாதம் சலித்து உதறிவிட்டமையால் பதஞ்சலி எனப்பெயர் பெற்றார்.இடைக்குமேல் முனிவடிவம் இடைக்குக்கீழ் பாம்பு வடிவம் பெற்ற பதஞ்சலி நாகச்சேரி குளக்கரையில் மகாமகிமை பொருந்திய சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டு வந்தார் .அனந்தநாயகி பதஞ்சலி வழிபட்டமையால் அப்பெருமான் ஆனந்தீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள் தருகின்றார் இச்சிறப்பு வாய்ந்த திருக்கோயில் கடந்த 08.02.2015 அன்று குடமுழுக்கு நடைபெற்றது