கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருமூலஸ்தானம் கைலாசநாதர் சிவன்கோயில் காட்டுமன்னார்கோயிலின் கிழக்கில் மூன்று கிமி தூரத்தில் உள்ளது, இறைவன் கைலாசநாதர் இறைவி காமாட்சி முற்காலச் சோழர்களின் கட்டடக்கலைச் சான்றாக உள்ள இக்கோயிலில் அழகான சிற்பங்கள் உள்ளன.சித்திரை முதல் வாரத்தில் மூலவர்மீது சூரிய ஒளி விழுகிறது. ஆஸ்தான மண்டபம் சிறிய அளவிலான செங்கற்களால் கூம்பு வடிவில் கட்டப்பட்டுள்ளது. கருவறையின் வெளிப்புற சுவற்றில் கிரந்த எழுத்துக்களால் ஆன கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதும் செடிகளும், முட்புதர்களும் காணப்பட்டு, பராமரிப்பின்றி உள்ளது. அகத்தியர் சிவனை வணங்குவது போன்ற சிற்பம் உள்ளது. கோயில் பராமரிப்புக்காக தரப்பட்ட கொடை பற்றிய விவரங்கள் இதில் காணப்படுகின்றன. நூசசோழன் எனும் மன்னன் இக்கோயிலை கட்டியதாக கூறுகின்றனர். துர்க்கை, இலட்சுமி, சரசுவதி...