இத்திருக்கோயில் வீரநாராயணபுர சதுர்வேதமங்கலம் என்றழைக்கப்படும் காட்டுமன்னார்கோயிலிருந்து தெற்கே 50மீ. தொலைவில் உள்ள உடையார்குடியில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரன் அஷ்ட நாகத்தில் ஒன்றான அனந்தன் என்னும் நாகம் வழிபட்டு முக்தி அடைந்ததால் அனந்தீஸ்வரர் ஆலயம் என பெயர் பெற்றது. முதலாம் பராந்தகசோழமன்னன் சிறந்த சிவபக்தன் ஆவார். இவர் கி.பி.940ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலை கட்டினார். மதுராந்தசோழன் ஆட்சிபொறுப்பேற்றதும் கி.பி.970இல் இராஜராஜசோழன் தஞ்சாவூரை விட்டு இங்கு தங்கியிருந்தார். அவரது மகன் ராஜேந்திரசோழனும் இங்கு இருந்திருக்கிறார். சோழ உடையார்கள் தங்கிய இடமாதலால் உடையார்குடி எனப்பட்டது....