அருணகிரிநாதர் கோயம்பேடு திருக்கோயில் சென்று சிவ தரிசனம் செய்துவிட்டு திருமுல்லைவாயல் செல்ல வழி தெரியாமல் தவித்த போது சிவன் முதியவராக வடிவெடுத்து அமர்ந்திருந்தை பார்த்த அருணகிரிநாதர், சிவனாரை வழி கேட்க அவருக்கு மார்க்கம் (வழி) காட்டிய சிவனிடம் அருணகிரிநாதர் தன்னைப்போலவே வாழ்வில் வழி தெரியாதவருக்கு நல்வழி காட்டிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை ஏற்ற சிவபெருமான் அவ்வாறே வரமளித்து இத்திருத்தலத்தில் தங்கியதால் மார்கசகாயஈஸ்வரர் என பெயர் கொண்டு இத்திருக்கோயிலுக்கு வருபவர்களுக்கு நல்வழி காட்டி வாழ்வில் எல்லா வளங்களையும் வாரி வழங்கி வருகிறார்.