அருள்மிகு முருகர் திருக்கோயில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவானது மிகவும் சிறப்பான முறையில் நடைபெறும். மேலும் இத்திருக்கோயிலானது 100 ஆண்டுகளுக்கு உட்பட்ட திருக்கோயிலாகும்.