திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், முன்னூர்மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு துர்கையம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலானது மிகவும் பழமைவாய்ந்த 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கிராம தேவதை திருக்கோயிலாகும். இக்கோவிலானது செங்கம் நகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அன்வராபாத் கிராமத்திற்கு அருகில் முன்னூர்மங்கலம் ஏரிக்கரையில் அமைந்துள்ளது.