பாசுபதேசுவரர் கோயில் என்பது திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 2வது சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் பாசுபதேஸ்வரர், தாயார் நல்லநாயகி (சமசுகிருதம்: சத்குணாம்பாள்). இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இத்தலத்தின் தல விருட்சமாக மூங்கில் மரமும், தீர்த்தமாக கிருபா தீர்த்தமும் அமைந்துள்ளது.