இக்கோயிலானது ஊரின் நடுவிலேயே இருக்கிறது . கோயிலின் முன் பகுதியில் பெரிய ராஜகோபுரம் இல்லை ஆனால் ஒரு சிறு விமானம் போல் அமைத்துள்ளார்கள். அதில் ஈசனும் பார்வதியும் கைலாயத்தில் அமர்ந்து உள்ளது போல் சுதை சிற்பமாக அமைத்துள்ளார்கள் . இப்போது நாம் அவ் நுழைவாயிலை கடந்து உள்ளே சென்றால் பலி பீடம் மற்றும் நந்தி மண்டபத்தை காணலாம் . நந்தி மண்டபத்தில் உள்ள நந்தி பிற்காலத்தை சேர்ந்தது பீடத்தின் அருகிலேயே கீழ் பகுதியில் பழைய நந்தியையை நிறுவியுள்ளார்கள் . முழுவதும் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்தக் கோயிலின் விமானம் வட்ட வடிவத்தில் அமைந்திருக்கிறது. கருவறையுடன் 16 கல் தூண்களையும் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றிலும் பல்வேறு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. உள் மண்டபத்தினுள்...