திருமானூர் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலின் கிழக்கு வாசல் வழியாக உள்ளே வந்தால் பலி பீடம் நந்திகேஸ்வரர் தரிசனம் செய்து விநாயகர் மூலவர் கைலாசநாத சுவாமி கிழக்கு முகமாகவும் காம கோட்ட செல்வியாம் காமாட்சி அம்மன் தெற்கு முகமாகவும் அமையப் பெற்ற இவ் விறு தெய்வங்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். இவாலயம் சுமார் 2.5ஏக்கர் பரப்பளவில் இரண்டு வாசல் இரண்டு பிரகாரம் உள்ள அமைந்துள்ள ஆலயம் ஆகும்.இவூரின் பழமையான பெயர் திரைமூர் .கொள்ளிடம் கரையிலன் அருகில் இத் திருக்கோவில் அமைந்துள்ளது இவூர் 750 ஆண்டுகள் பழைமையானது என பெண்ணாடம் பிரன வசாலேஸ்வரர் திருக்கோவில் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது இத் திருக்கோவிலுக்கு ஸ்ரீ குமார ஒப்பில்லாத மழவராயர் எனற பாளையக்காரர் நில...