ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஊரின் முற்காலத்துப் பெயர் விக்கிரமசோழபுரம் என்பதாகும். கங்கையும் கடாரமும் வென்று புகழ் ஈட்டடிய முத்லாம் இராஜேந்திர சோழனின் மற்றொரு பெயர் தான் விக்கிரம சோழன் இந்த ஊர் வணிக நகரமாக இருந்தது. இங்கு அவர் பெயரில் இராஜேந்திர சோழீஸ்வரம் என்ற பெரிய சிவன் கோயில் கட்டப்பட்டது. பிற்காலத்தில் விக்கிரமங்கலம் என மருவியது என இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். ஊரின் ஈசானிய மூலையில் அமைந்து இருக்கும் இந்த கோயிலில் இரண்டு காபுரங்கள் உள்ளன. இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அம்மனின் திருநாமம் பிறையணியம்மை என்ற பூரண சந்திரகலாம்பிகை இங்குள்ள சனீஸ்வரர் சன்னிதியில் ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தாமரை, அரளி போன்றவற்றால் அர்ச்சனை செய்து எள் தீபம் ஏற்றி வழிபாட்டால் நவகிரக...