நங்கவரம், அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருச்சியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மேலும் கருவறையில் சுந்தரேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இத்திருக்கோயில் கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம், கோமளாம்பிகை அம்மன் சன்னதி, திருச்சுற்று, நந்தி, பலிபீடம் என்ற அமைப்பில் உள்ளது. சப்தமாதர்களுக்கு சிறு சன்னதி, சண்முகநாதன்,கன்னிமூலை கணபதி, வள்ளி மற்றும் தேவசேனா சன்னதி ஜேஷ்டாதேவி சன்னதி, துர்க்கையம்மன் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி, நவகிரக சிற்பங்கள், அகண்டேஸ்வரர் சன்னதி, கோமளாம்பிகை சன்னதி ஆகிய தனி சன்னதிகள் உள்ளன. நங்கவரம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை கட்டிய பராந்தக சோழனுக்கு பிறந்த பெண்குழந்தையின் முகமானது நரியின் முகம் போன்று இருந்ததால் வருந்தி வணங்கி வரும் நேரத்தில் பராந்தக சோழனின் குருவின் அறிவுரையின்படி, காசியில்...