திருவருள் காளீசுவரர் சுப்பிரமணியசுவாமி கோயில், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில், புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில், நற்சாந்துபட்டி கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் மலையக்கோயில் என்னுமிடத்தில் மலையில் அமைந்துள்ள சிவன் மற்றும் முருகன் கோயிலாகும்.1 புதுக்கோட்டையில் இருந்து மலையக்கோவிலுக்கு நேரடியாக நகரப் பேருந்து வசதி உள்ளது. அமைப்பு மலையக்கோயில் முன்னர் ஒருக்கொம்பு மலை, குறிஞ்சி கொத்த நாவல் குறிச்சி, திருநாவலங்கிரி, திருவோதிக்கால் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.ஏறுவதற்கும் இறங்குவதற்கும் சாரப்பாதை, படிவெட்டுப்பாதை என்ற இருவேறு பாதைகள் உள்ளன.2 மலையின் கீழுள்ள கோயில் கீழ்க்கோயில் என்றும், மலையின் மீதுள்ள கோயில் மேல்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் கிழக்கில் ஒரு குடவரைக் கோயிலும், தெற்கில் ஒரு குடவரைக் கோயில்களும், ஆக இரண்டு குடவரைக் கோயில்கள் உள்ளன. கிழக்குக் குடவரைக் கோயிலில் ஒரு கருவறையும்...