அருள்மிகு மனோன்மணியம்மன் திருக்கோயில் புதுக்கோட்டையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மன்னரின் திவானாக இருந்த திரு.சர்.சேஷையா சாஸ்திரிகள் புதுக்கோட்டையின் வீதிகளை வடிவமைக்க முற்பட்டபொழுது இத்திருக்கோயிலை மையமாக வைத்து தான் நான்கு பக்கங்களிலும் வீதிகள் சரியான அளவுகளில் பிரிக்கப்பட்டது. அருள்மிகு மனோன்மணியம்மன் சிவசக்தி ஸ்வரூபிணியாக இருப்பதால் இங்கு மட்டும் அம்பிகையின் வாகனமாக ரிஷபம் உள்ளது. சிவசக்தி ஸ்வரூபிணியாக இருப்பதால் வருடத்தில் ஒரு நாள் மட்டும் ஆடி பௌர்ணமி அன்று அம்பிகைக்கு கருப்பு வர்ண வஸ்திரமும், ருத்திராக்ஷ மாலையும் அணிவிக்கப்படுகிறது.