புதுக்கோட்டை சமஸ்தான மன்னர்கள் காலத்தில் புதுக்கோட்டை மாமன்னர்களின் குல தெய்வமாக அருள்மிகு பிரகதாம்பாள் வழிபாடு விளங்கியது. அக்காலத்தில் பெரிய கோயில் என்று விளங்கியது. புதுக்கோட்டை மாமன்னர்கள் தங்கள் பிரகதாம்பாள்தாஸ் என்று பட்டம் சூட்டிக் கொண்டார்கள். காமதேனு சாபவிமோசனம் அடைந்த ஸ்தலம் ஆகும். கி.பி.6ம் நூற்றாண்டைச் சேர்ந்த இத்திருக்கோயில் குடவரைக்கோயிலாகும். பல கல்வெட்டுகள் இத்திருக்கோயிலில் காணப்படுகின்றன. புதுக்கோட்டை மன்னர் ஆட்சி காலத்தில் வெளியிடப்பட்ட அம்மன்காசு நாணயத்தில் அருள்மிகு பிரகதாம்பாள் அம்மன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அம்மனுக்கு அரைக்காசு அம்மன் என்ற பெயரும் நடைமுறையில் உள்ளது. காமதேனு (கோ) தனது காதில் (கர்ணம்) கங்கை தீர்த்தம் கொண்டு வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்தாக ஐதீகம். எனவே இத்திருக்கோயில் அமைந்த பகுதிக்கு திருகோகர்ணம் என்ற பெயர்...