புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர், புதிய பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி செல்லும் சாலையில் திருக்கோகர்ணத்தில் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயிலுக்கு அருகில் திருக்குளத்தின் கிழக்கு கரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதியும், ஒரு சுற்றுப்பிரகாரமும் கொண்ட சிறிய திருக்கோயிலாகும். மாதந்தோறும் பிரதோஷ விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காலசந்தி மற்றும் சாயரட்சை ஆகிய இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது.