புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர் திருவப்பூரில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயிலாகும். ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் கல்யாண வெங்கடேச பெருமாள் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறும் அன்று ஒரு நாள் மட்டும் திருவீதி உலா நடைபெறும். நாள்தோறும் கால சந்தி பூஜை மட்டும் நடைபெறுகிறது.