புதுக்கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இத்திருக்கோயில் புதுக்கோட்டை நகர் கீழராஜவீதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் உறையும் அரியநாச்சியம்மன் காவல் தெய்வமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் கருப்பர், மதுரை வீரன், வெள்ளையம்மா, பொன்னியம்மன் ஆகிய சந்நிதிகளும், பிள்ளையார் சந்நிதியும் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருக்கோயிலில் நடைபெறும் இத்திருவிழாவில் புஷ்பபல்லக்கு விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி 9 நாட்களுக்கும் அம்மனுக்கு 9 விதமான அலங்காரங்களும் மிகச் சிறப்பாக நவராத்திரி கொலுவும் நடைபெறும் இத்திருக்கோயிலில் காலசந்தி, சாயரட்டை இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.