சுயம்பு லிங்கத் தலம். மகா லெட்சுமி தவம் செய்து வரம் பெற்ற திருத்தலம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்களுள் உயர்ந்த கோபுரத்தைக் கொண்ட திருக்கோயிலாகும். கருவறை சுவற்றிலுள்ள காலத்தால் முற்பட்ட கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 40வது ஆட்சி ஆண்டைக்குறிக்கிறது. (கி.பி.1218-19) கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம் அனைத்து ஒரே நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் கருவறைக்கு முன் உள்ள மண்டபங்களை ஒட்டி நூற்றுக்கால் மண்டபம் இதை ஒட்டி உள்ள இரண்டாவது கோபுரம் கங்கையரையர்களால் கட்டப்பட்டது. இந்த கோபுரத்தையும் ராஜ கோபுரத்தையும் இணைக்கும் மண்டபத்தின் பெயர் நட்சத்திர மண்டபம் ஆகும். இந்த மண்டபத்திற்கு வடக்கே உள்ளது. சபரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அம்மன் சந்நிதியை மூன்றாம் குலோத்துங்க சோழனின் 39ம் ஆட்சியாண்டில் (கி.பி.1217-18)ம் நூற்றாண்டில்...