திருக்கோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில் வரலாற்றுடன் தொடர்புடையது. திருக்கோகர்ணத்தில் சாப விமோசனம் பெற வந்த காமதேனு பசுவிற்கு முக்தியளித்த திருத்தலம். சோழர்களின் காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக தலமாக விளங்கிய ஊர். தட்சிணாமூர்த்தி சிலை மிகுந்த கலை அம்சத்துடன் விளங்குகிறது. இக்கோயிலில் 15 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படி எடுக்கப்பட்டுள்ளன. இதில் காலத்தால் முந்தியது கி.பி.1011-ம் நூற்றாண்டு இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டாகும். புதுக்கோட்டை பகுதியில் பண்டைய வரலாறு, கலை, கலாச்சாரம் குறித்த பல செய்திகளை இக்கல்வெட்டுகள் கொண்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மிகச்சிறந்த குருதலமாக விளங்குகிறது. வியாழன் தோறும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இத்திருக்கோயில் சதுர விடங்கத்தலம், இத்தலத்தில் யோக ஞான தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் உறைபவராய் உள்ளதால் குரு...