திருமணத்தடை நீக்கும் திவ்ய திருத்தலம். கி.பி.10-11ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் பாண்டிய காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 10-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படி எடுக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் உறையும் சுவாமி சுயம்பு லிங்கமாக விளங்குவது தனிசிறப்பு. தினமும் அதிகாலை சூரிய பகவானின் வழிபாடே இத்திருக்கோயிலின் முதன்மையானதாக விளங்க வேண்டும் என்று சூரிய ஒளி காலை 6.00 மணிக்கு சுவாமி மேல் படுமாறு அமைக்கப்பட்டுள்ளது.