இக்கோயில் மண்மலையின் மீது அமைந்துள்ளது. கோயிலில் சிவலிங்கம் காசியிலிருந்து பெருஞ்சீவி சிரஞ்சீவி என்னும் அசுரர்களால் வழிபட்டது என அறியப்படுகிறது. அக்காலத்தில் இந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் காசி கோயிலின் படியில் இருக்குமாம். இதனால் இவரை படிக்காசிநாதர் என்ற பெயரிட்டு அழைத்தனர். அம்மன் சன்னதி 13 நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் திருப்பணி செய்யப்பட்டது. மாத சங்கிரம பூஜைக் காலத்தில் (மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை) திருமணம் ஆகாத பெண்கள், சுமங்கலிகள் ஜாதகத்தில் பித்ருதோஷம் உள்ளவர்கள், புத்ரதோஷம், மாங்கல்யதோஷம் சர்ப்பதோஷம் உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பாளுக்கும் அர்ச்சனை செய்து கொடிமரத்தின் முன்பு ஐங்கோணக் கோலமிட்டு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகல தோஷங்களும் நீங்கி மங்கலம் உண்டாகும்.