திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம். இத்திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கோயில் மத்திய தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது. இது ஒரு குடவரைக்கோயில் ஆகும். ஊமத்துரை மன்னரால் கட்டப்பட்ட புஷ்கரணி தடாகம் உள்ளது. பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். முன்னோர்கள் இட்ட சாபம் நீங்க இத்திருத்தலம் வந்து அருள்மிகு சத்தியமூர்த்திப் பெருமாளுக்கு அர்ச்சனைச் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அருள்மிகு உஜ்ஜீவனத் தாயாருக்கு பிள்ளை வரம் வேண்டி சிறிய தொட்டில்கள் வாங்கி சந்நிதியில் கட்டி வேண்டுதல் நிறைவேறி செல்கின்றார்கள்.