பாறாங்கல்லில் தண்ணீர் இல்லாமல் சுற்று பிரகாரத்தில் கதலி (வாழை) மரம் செழிப்பாக வளர்ந்து சுவாமியின் அபிஷேகத்திற்கு வாழைப்பழம் தருவது மிகச் சிறப்பாகும். இக்கோயிலில் 12 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு படி எடுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் காலத்தால் முற்பட்டது சடையவர்மன் முதலாம் குலோத்துங்கன் காலத்தைச் சேர்ந்ததாகும். முற்காலத்தில் மறைமான் விக்ரம பாண்டிய நல்லார் என்பவரால் இந்த தலம் அமைக்கப்பட்டதாக கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது. இக்கோயிலில் பல அழகிய சிற்பங்கள் உண்டு. இதில் கருவறையின் வெளியே மேற்கு மாடத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பம் குறிப்பிடத்தக்கது. பாண்டிய மன்னன் இவ்வூர் வழியாகக் குதிரையில் வரும் பொழுது குதிரையின் குளம்பு ஒரு கல்லின் மீது பட்டு இரத்தம் வரவே இந்த இடத்தை தோண்டிப்...