பக்தர்கள் தம் வேண்டுகோள் நிறைவேற அம்பாளுக்கு காணிக்கையாக மஞ்சளை செலுத்துவது வழக்கம். இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்த (கி.பி.710 775) குடவரைக் கோயிலாகும். இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் முகப்பு நான்கு சக்கரங்களுடன் கூடிய தேர் வடிவத்தில் இரண்டு குதிரைகள் இழுப்பது போல் வடிவமைக்கப்பட்டு இம்மண்டபத்தில் கலைமிகு சிற்பங்கள் உள்ளது. காலத்தால் இரண்டாம் நந்திவர்மன் மற்றும் நந்திவர்மன் காலத்து கல்வெட்டுகள் சாளுக்கிய சோழர் பிற்கால பாண்டியர் விஜயநகர மன்னர்கள் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கன்னிப்பெண்கள் நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கவும், சுமங்கலிப் பெண்கள் வாழ்க்கைத்துணை நீண்ட ஆயுளுடன் இருக்கவும் அம்பாளுக்கு மஞ்சள் கிழங்கை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டிக்கொண்டு அம்பாள் சந்நிதியின் முன் உள்ள தொட்டியில் செலுத்துவது வழக்கம். இந்த மஞ்சள் தூளாக...