நார்த்தாமலையிலுள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்த்திலேயே முக்கியமான வழிபாட்டுத்தலமாகும். இத்திருக்கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்திருக்கோயிலின் அம்மன் சிலை நார்த்தாமலையிலிருந்து சுமார் 4கல் தொலைவிலுள்ள கீழக்குறிச்சி என்னும் கிராமத்தில் ஒரு வயலில் கண்டெடுக்கப்பட்டு இங்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும், இச்சிலையை இந்த ஊரில் உள்ள குருக்கள் பிரதிஷ்டை செய்து சிறிய கோயில் ஒன்று எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. திருவண்ணாமலைக்கு அருகிலுள்ளவேட்டவலம் என்ற ஊரின் ஜமீன்தார் புனிதப்பயணம் மேற்கொண்டு வரும்பொழு இத்திருக்கோயிலுக்கும் வந்த அம்மனை வழிபட்டார். அப்பொழுது அவருடைய மகள் 6 வயது சிறுமி மலையம்மாளுக்கு அம்மை நோய் கண்டு அதிகம் ஆகிவிட்ட நிலையில் அக்குழந்தையை கோயிலியே விட்டுச் சென்று விட்டனர். அச்சிறுமி அம்மனின் அருளால் உயிர் பிழைத்தான் மீண்டும்...