வாஸ்து தோஷம் நீக்கும் ஸ்தலம். நந்திவர்மன் பல்லவன் காலத்தில் (கி.பி.775 826) அம்மன்னது 16-வது ஆட்சியாண்டில், குவாவன் சாத்தான் என்னும் விடேல் விடுகு முத்தரையன் இங்குள்ள திருவாலத்தூர் மலையைக் குடைந்து சிவனுக்கு கோயில் எழுப்பியதாக கல்வெட்டு தெரிவிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் சப்த கன்னியர், கணேசர், வீரபத்திரர், சிவன் விஷ்னு ஆகிய சிற்பங்கள் மலையிலேயே செதுக்கப்பட்டுள்ளனர். மேலும் இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் மிகவும் சிறப்புடைய கலையம்சம் மிக்கதாக கருதப்படுகிறது. இக்கோயிலை எடுப்பித்த விடேல் விடுகு முத்தரையன் என்பவர் சைவ சமய குரவர் அப்பர் மீது கொண்ட பக்தியினால் இப்பெருமானுக்கு வாகீஸ்வரர் என்று பெயரிட்டதாக கல்வெட்டு செய்தி தெரிவிக்கின்றது. தலவிருட்சமாக விளங்கும் ஏறழுஞ்சில் மரத்தின் சிறுகுச்சியை வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷங்கள் நீங்குவதாக...