திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயில் மிகவும் தொன்மையான திருக்கோயிலாகும். இத்திருக்கோவில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.திருக்கோயில் அருள்மிகு வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார் இத் திருக்கோயில் மகா மண்டபத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் தெற்குப் பார்த்து அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். சக்ரத்தாழ்வார் 16 கைகளுடன் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இரண்டு சுவாமிகளும் எதிர் எதிர் திசையில் ஒன்றை ஒன்று பார்த்து அமைந்துள்ளது இதன் சிறப்பாகும்