இத்திருக்கோயில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. சமயபுரத்தை அடுத்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் கிராமத்திலிருந்து மேற்கில் சுமார் 5 கி.மீ தொலைவில் திருப்பட்டூர், அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் அருள்மிகு பிரம்மா தனக்கு ஐந்து முகங்கள் உள்ளதால், தானும் ஈசனைப் போல முத்தொழிலும் செய்ய வல்லான் (படைத்தல், காத்தல், அழித்தல்) என்று தனக்குள் செருக்குற்றார். அதனால், பிரம்மாவின் செருக்கை அடக்க எண்ணிய ஈசன் பிரம்மாவின் ஒரு தலையை கொய்ததோடு படைப்பாற்றலையும் நீக்கினார். தனது தவறை உணர்ந்த பிரம்மா இத்தலத்தில் 12 (துவாதச) சிவலிங்கங்களையும், தீர்த்த கிணற்றையும் உருவாக்கி வழிபட்டு தன் பழைய சக்திகளை மீண்டும்...
07:00 AM IST - 12:00 PM IST | |
04:00 AM IST - 08:00 AM IST | |
12:00 PM IST - 04:00 AM IST | |
காலை 07.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 12.00 மணிக்கு நடை சாத்தப்படும் மாலை 04.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 08.00 மணிக்கு நடை சாத்தப்படும். வியாழக்கிழமைகளில் மட்டும் காலை 06.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு நண்பகல் 01.00 மணிக்கு நடை சாத்தப்படும், மீண்டும் 04.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 08.00 மணி நடை சாத்தப்படும் |