இத்திருக்கோயிலானது திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 3 கி.மீ. பிராட்டியூா் எனும் ஊாில் உள்ள இரட்டை மலை என்று அழைக்கப்படும் சிறிய குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் பிரதான மூலவா் அருள்மிகு ஒண்டிகருப்பண்ண சுவாமி ஆகும். இத்திருக்கோயில் சமீபகால திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் அமைந்துள்ள மூலவா் காவல் தெய்வமாகும். மேலு்ம பலருக்கு குலதெய்வ வழிபாட்டிற்குாிய திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் அய்யனாா், மதுரை வீரன் போன்ற காவல் தெய்வங்களுக்கு தனிசன்னிதிகளும், மேலும் விநாயகா் மற்றும் மலைக்காளி ஆகிய உபசன்னதிகளும் அமைந்துள்ளது சிறப்பு.