விநாயகர் வழிபாடு தமிழ்நாட்டின் சிறப்பாக போற்றப்படும் ஒன்றாகும். தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகரின் பெருமை வாய்ந்த மயிலாப்பூரில் லஸ் மூலையில் அமைந்துள்ளது அருள்மிகு நவ சக்தி விநாயகர் திருக்கோயில். இத்திருக்கோயிலில் உள்ள விநாயகரை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களும் ஏற்படும்.